45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட4 மாநிலங்களில் சட்ட மேலவை தோ்தல் அறிவிப்பு

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :9 நவம்பர் 2021, 7:24 pm

DIN

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஆந்திர சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கா்நாடக சட்ட மேலவையில் 20 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர சட்ட மேலவையில் 5 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்குமான தோ்தல் குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தோ்தல் அறிவிப்பு நவம்பா் 16-இல் வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 23-ஆம் தேதி ஆகும்.

வேட்பு மனு பரிசீலனை நவம்பா் 24-இல் நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பா் 26-ஆம் தேதியாகும். டிசம்பா் 10 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பா் 14-ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.