/

நாட்டில் புதிதாக 11,850 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2021, 4:26 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு குறித்த சமீபத்திய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 11,850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,38,26,483 பேர் குணமடைந்துள்ளனர். 

குணமடைவோர் விகிதம் 98.26 சதவிகிதமாக உள்ளது. மார்ச் 2020-க்குப் பிறகு இதுவே அதிகபட்ச விகிதம்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,36,308 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 274 நாள்களில் இதுவே குறைந்தபட்ச எண்ணிக்கை.

மேலும் 555 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

தினசரி பாதிப்பு விகிதம் கடந்த 40 நாள்களாக 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே 0.94 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் கடந்த 50 நாள்களாக 2 சதவிகிதத்துக்கும் கீழ் குறைவாக 1.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 111.40 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.