அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நாட்டில் புதிதாக 11,271 பேருக்கு தொற்று: 285 பேர் பலி

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 11,271 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 285 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:34 am

DIN

புதுதில்லி:  நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 11,271 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 285 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 11,376 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 11,271 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 269 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாகும். மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307-ஆக உயா்ந்துள்ளது. 

11,376 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,38,37,859 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,35,918-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 285 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,63,530 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது இறப்பு விகிதம் 1.35 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 1,12,01,03,225 ஆக அதிகரித்துள்ளது.
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை மட்டும் 57,43,840 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 62,37,51,344 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 12,55,904 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.