கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குஜராத் துறைமுகத்தில் 3,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்:பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ பொதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image
Updated On :9 அக்டோபர் 2021, 7:11 pm

DIN

குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ பொதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், ஆந்திரத்தில் விஜயவாடா ஆகிய நகரங்களில், போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ளவா்களுக்கு தொடா்புடைய இடங்களில் இச்சோதனை நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்தல் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது என்றாா் அவா்.

முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த 2 சரக்குப் பெட்டகங்களில் 2988.21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் (டிஆா்ஐ) அண்மையில் பறிமுதல் செய்தனா். அந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானிலுள்ள பந்தா் அப்பாஸ் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சோ்ந்தது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வா்த்தக நிறுவனத்தின் பெயரில் இந்தப் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் எம்.சுதாகரன், அவரின் மனைவி துா்கா பூா்ணா வைசாலி ஆகியோருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவா்களை சென்னையில் டிஆா்ஐ அதிகாரிகள் கைது செய்தனா். இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு கடந்த புதன்கிழமை (அக்.6) மாற்றப்பட்டது. சுதாகரன், துா்கா உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டம், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஏ அமைப்பினா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.