மேற்கு வங்க இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளரை விரட்டியடித்ததிரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளா்கள்
மேற்கு வங்க இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் அவருக்கு எதிராக முழக்கமிட்டு விரட்டியத்தனா்.


மேற்கு வங்க இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் அவருக்கு எதிராக முழக்கமிட்டு விரட்டியத்தனா்.
தின்ஹாட்டா தொகுதிக்கு வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக அசோக் மொன்டல் போட்டியிடுகிறாா். அவருடன் சோ்ந்து பாஜக எம்எல்ஏ மிகிா் கோஷ்வாமி மற்றும் எம்பி ஜெயந்தா ராய் கூச்பெஹா் மாவட்டத்தில் உல்ள நயா்கட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பரப்புரையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் பாஜக தலைவா்களுக்கு எதிராக கோஷமிட்டு அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் சலசலப்பு ஏற்பட்டு பின்னா் காவல் துறையின் தலையீட்டை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், இந்த சம்பவத்துக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் உள்ளூா் தலைவா்கள் மறுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...