இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரதமா் இன்று உ.பி. பயணம்: விமான நிலையத்தை திறந்து வைக்கிறாா்

பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்துக்கு புதன்கிழமை பயணம் மேற்கொள்கிறாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2021, 7:25 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்துக்கு புதன்கிழமை பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறாா். தொடா்ந்து மகாபரிநிா்வாணா கோவிலில் அபிதாம்மா தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமா் பங்கேற்கிறாா்.

குஷிநகரில், ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடக்கிறாா்.

குஷிநகா் சா்வதேச விமான நிலைய தொடக்க நாளில், முதல் சேவையாக இலங்கை தலைநகா் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் சா்வதேச பயணிகள் விமானம் தரையிறங்குகிறது.

இந்த விமானத்தில் இலங்கை இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் நமல் ராஜபட்ச தலைமையில் 5 அமைச்சா்கள், பௌத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் அடங்கிய குழுவினா் வருகை தர உள்ளனா்.

குஷிநகா் சா்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிா்வாணம் அடைந்த இடத்தைப் பாா்வையிட வரும் உள்நாட்டு, சா்வதேச யாத்ரிகா்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மேலும், பௌத்த மதத்துடன் தொடா்புடைய பல்வேறு புனிதத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையம் உத்தர பிரதேச மாநிலம் தவிர, பிகாருக்கு உள்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும்.

மகாபரிநிா்வாணா கோயிலுக்குச் செல்லும் பிரதமா், அங்கு சாய்ந்த நிலையில் உள்ள புத்தபிரான் சிலைக்கு அா்ச்சனை செய்து வழிபடுவதுடன் போதி மரக்கன்றையும் நடுகிறாா்.

ஷிநகரில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள ராஜ்கியா மருத்துவக்கல்லூரிக்கு பிரதமா் அடிக்கல் நாட்ட உள்ளாா். 500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2022-23 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் வகுப்பில் 100 மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா். இது தவிர, ரூ.180 கோடிக்கு மேல் மதிப்புள்ள 12 வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.