கேரளத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் அங்கு தொடக்கம் முதலே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
கேரளத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியான 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளதை அடுத்து கேரள அரசு சாதனை படைத்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94.58 சதவிகிதம் (2,52,62,175) பேர் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 50.02 சதவிகிதம் (1,33,59,562) பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 77.37 சதவிகிதம் பேர் மட்டுமே முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 33.39 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.
திட்டமிடப்பட்ட சரியான முறையில் செயல்பட்டதால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடிந்தது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் 100 சதவிகிதம் பேரும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
சிலர் சரியான நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதில்லை. அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நினைவூட்டப்படுகிறது. சரியான நேரத்தில் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

