புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குஜராத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்ட தலித் குடும்பத்தினர்: 20 பேர் மீது வழக்குப்பதிவு

குஜராத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
குஜராத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்ட தலித் குடும்பத்தினர்: 20 பேர் மீது வழக்குப்பதிவு
Updated On :29 அக்டோபர் 2021, 1:46 pm

DIN

குஜராத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்திதாம் கிராமத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்நிலையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கோவிலில் வழிபடுவதற்காக கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த உயர்சாதி பிரிவினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்த்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.

அவர்களின் செல்போன், ரிக்‌ஷா உள்ளிட்டவற்றை சேதப்படுத்திய உயர்சாதி பிரிவினர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்நிலையில் சாதியின் பெயரைச் சொல்லி தாக்கியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். 

குஜராத் மாநிலத்தில் சாதியின் பெயரால் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.