இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாத மாவட்டங்கள்; ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி

ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

News image
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Updated On :31 அக்டோபர் 2021, 10:43 am

DIN

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களின் அலுவலர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம்தான், 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. இது புதிய இந்தியாவை பிரதிபலிக்கிறது என மோடி குறிப்பிட்டிருந்தார். 50 சதவிகிதத்திற்கும் குறைவாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்ட அலுவலர்களிடமும் இரண்டாம் தவணை மிகக் குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாவட்ட அலுவலர்களிடமும் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் பிற மாநிலங்களில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பிரதமர் கலந்துரையாடுவார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்.

அரசு வெளியிட்ட தகவலின்படி, 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வயது வந்தோரில் நான்கில் மூன்று சதவிகிதத்தினர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 30 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று ரோமில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில், தொற்றுநோய்க்கு எதிரான போரில் உலகிற்கு உதவ இந்தியா ஒரு பில்லியன் தவணைகளை நிர்வகித்துள்ளது என்றும் அடுத்தாண்டு இறுதிக்குள் 5 பில்லியனுக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி அளவை தயாரிக்க தயாராக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவை விட அதிக தடுப்பூசிகளை தயாரித்த ஒரே நாடு அண்டை நாடான சீனாவாகும். செப்டம்பர் பிற்பகுதியில் சுமார் 1.05 பில்லியன் அல்லது 75 சதவீத குடிமக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது. வயது வந்தோருக்கு இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடுவதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.