ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் மூன்று வென்வேறு வகையான டைனோசர்களின் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்த டைனோசர் விலங்குகள் இயற்கை பேரழிவுகள் காரணமாக அழிந்தன. டைனோசர்களின் எச்சங்கள் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | துரோகம் இழைத்தவர்களுடன் கூட்டணி கிடையாது: மகா. பாஜக தலைவர்
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர் மாவட்டத்தில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று வெவ்வேறு வகை டைனோசர்களின் காலடி தடங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வண்டல் மண் பகுதியில் பதிவான இந்தக் காலடித் தடங்கள் கால வேகத்தில் கற்களாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டைனோசரின் தடங்கள் 35 சென்டி மீட்டரும், மற்றொரு வகை டைனோசரின் தடம் 5.5 சென்டி மீட்டரும் கொண்டவையாக உள்ளன.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் புதிதாக 4130 பேருக்கு கரோனா தொற்று
இந்திய மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வில் பங்குபெற்ற டாக்டர்.பரிஹார், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் டைனோசர்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.
மேலும், “இது ராஜஸ்தானில் டைனோசர் எச்சங்களின் கண்டுபிடிப்புகளுக்கான ஆரம்பம். எதிர்காலத்தில் மேலும் டைனோசர் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை தெற்குத் தொகுதியில் கரூரைச் சோ்ந்த 18 போ் மனு தாக்கல்

தொகுதி அலசல்: ஆம்பூா்! திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - திமுக வேட்பாளா் காா்த்திகேயன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


