இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாட்டில் புதிதாக 43,263 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 338 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2021, 4:33 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

நாட்டில் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று 40,567 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,23,04,618 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 338 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4,41,749-ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,93,614-ஆக உள்ளது. 

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 71,65,97,428 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,51,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | மாறிவிட்டாா்களா தலிபான்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.