மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத் முதல்வராக நாளை பதவியேற்கிறார் பூபேந்திர படேல்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் பதவியேற்கிறார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 4:07 pm

DIN


குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் பதவியேற்கிறார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்வது குறித்து நேற்றும் இன்றும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறுகையில், "குஜராத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் நாளை பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவிக்கு யாரும் இன்னும் தேர்வு செய்யப்படாததால் அவருடன் வேறு எவரும் பதவியேற்கப்போவதில்லை. புதிய அமைச்சரவைக் குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் பூபேந்திர படேல். 

இந்த நிலையில், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் நாளை பிற்பகல் 2.20 மணிக்கு பதவியேற்பார் என ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.