/

கர்நாடக அமைச்சரின் சுட்டுரைக் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள்

கர்நாடக தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின் சுட்டுரைக் கணக்கை ஹேக்கர்கள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.

News image
கர்நாடக தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

DIN

கர்நாடக தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின் சுட்டுரைக் கணக்கை ஹேக்கர்கள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.

கர்நாடக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் முருகேஷ் நிரானி. இவர் தனது சுட்டுரைப் பக்கத்தை செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாதவர்கள் கைப்பற்றிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “எனது சுட்டுரைப் பக்கம் அடையாளம் தெரியாத வெளிநாட்டு பகுதியிலிருந்து ஹேக் செய்யப்பட்டுள்ளார். இதனை செய்தவர்கள் குறித்து எந்த விவரங்களும் தெரியவில்லை. ஹேக்கர்கள் பதிவிடும் எந்த மோசடி செய்திகளுக்கும் யாரும் இரையாகிவிடக் கூடாது என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் நிறுவனத்திடம் புகாரளித்த சில மணி நேரங்களில் மீண்டு அமைச்சர் முருகேஷ் நிரானியின் சுட்டுரைக் கணக்கு மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.