தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மன்மோகன் சிங்: காங்கிரஸ் புகழாரம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 89ஆவது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார்.

News image
மன்மோகன் சிங்
Updated On :26 செப்டம்பர் 2021, 9:12 am

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். நாடு சந்திக்கும் பிரச்னைகளை நன்றாக புரிந்துவைத்திருக்கும் மன்மோகன் சிங்கிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் 89ஆவது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "தொலை நோக்கு பார்வை கொண்டவர். அர்ப்பணிப்புமிக்க தேசபக்தர். சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவர். இந்தியாவுக்கு உண்மையிலேயே தகுதியான தலைவர் நீங்கள்தான், டாக்டர். மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களையும் உங்களின் மகத்தான பங்களிப்பையும் காங்கிரஸ் கட்சியும் ஒட்டு மொத்த நாடும் இன்றும் எப்போதும் போற்றும். நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும் நன்றி" என பதிவிட்டுள்ளது.

"நிதியமைச்சராக பொறுப்பு வகித்ததிலிருந்து இன்று வரை, நாட்டின் வளர்ச்சியில் உங்களின் தடையற்ற அர்ப்பணிப்பின் காரணமாக நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் அனைத்து இந்தியர்களும் பயன் அடைந்துள்ளனர்" என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. 

பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்திய வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்தில், "டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை நன்கு புரிந்து கொண்ட புத்திசாலி. அச்சமில்லாதவர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.