இந்தியாவை அச்சுறுத்துகிறதா சீனா?

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லடாக்கில் சீனப்படைகள் தங்குமிடங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களை வைத்திருப்பதால் பதற்ற நிலை உருவாகியிருக்கிறது. 
இந்தியாவை அச்சுறுத்துகிறதா சீனா?
இந்தியாவை அச்சுறுத்துகிறதா சீனா?

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லடாக்கில் சீனப்படைகள் தங்குமிடங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களை வைத்திருப்பதால் பதற்ற நிலை உருவாகியிருக்கிறது. 

நாட்டின் எல்லைப் பகுதிகளில்  பதற்றம்  நிலவி வருவது இயல்புதான் என்றாலும் சமீப காலங்களில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் முக்கியப் பகுதியான லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஷிகோங், மான்சா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் சுருப் போன்ற இடங்களில் சீன ராணுவ வீரர்கள் தங்குவதற்கான தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேலும் ரஷியாவில் உருவாக்கப்பட்ட நிலத்திலிருந்து விண்ணில் பாயும் ஏவுகணைக்கான தளமும் , விமான ஓடுதளங்களையும் நிறுவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

முன்னதாக அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகள் சீனாவிற்கே சொந்தம் என அந்நாட்டு அரசாங்கம் கூறியதோடு மட்டுமில்லாமல் பெரும் ராணுவப் படையை அப்பகுதியில் நிறுத்தி வைத்து இந்திய அரசிற்கு தலைவலியை உருவாக்கியது.

இதனைக் கண்டித்து இணையத்தில் ’மற்றொரு நாட்டின் எல்லைப் பகுதியில் இன்னொரு நாடு எதற்காக இத்தனை ராணுவ வேலைகளை செய்கிறது’ என  கண்டனம் எழுந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com