விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மும்பையில் 23 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா

மும்பையில் 23 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 11:52 am

DIN

மும்பையில் 23 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் 23 மருத்துவ மாணவர்களுக்கு லேசான அறிகுறியுடன் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களில் 2 மாணவர்கள் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் பேசுகையில், "மாணவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். 
கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வின் காரணமாக தொற்று பரவியிருக்கலாம் என்றார். முன்னதாக வியாழக்கிழமை பெட்னேகர், மும்பையில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை அக்டோபர் 4லிருந்து மீண்டும் திறக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.