மும்பையில் கரோனா பரவல் 1%-ஆக குறைந்தது

மும்பையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளதாக மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி தெரிவித்துள்ளார். 
மும்பையில் கரோனா பரவல் 1%-ஆக குறைந்தது

மும்பையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளதாக மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்த  நிலையில், மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாகவே காணப்பட்டது.

இதனால், மகாராஷ்டிரத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதனால் தொற்று பரவும் விகிதம் குறைந்து வருகிறது.

அந்தவகையில் மும்பையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 300 முதல் 450-ஆக உள்ளது. கரோனா குறைந்ததன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், முன்களப் பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களின் அனுமதிக்கப்படுகின்றனர் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com