பழிக்கு பழி வாங்கிய காங்கிரஸ்; கேஜரிவாலின் கோட்டைக்குள் நுழைந்த சித்து...தில்லி அரசியலில் பரபரப்பு

தில்லி கல்வி முறை குறித்து நவ்ஜோத் சிங் சித்து ட்விட்டரில் விமரிசனம் மேற்கொண்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் மீது ஆம் ஆத்மி கட்சி அதிக கவனம் செலுத்திவருகிறது. கடந்த தேர்தலில், முதல்முறையாக போட்டியிட்ட அக்கட்சி, 20 இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, ஆம் ஆத்மி தலைவர்கள், பஞ்சாப் சென்று பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், அங்கு ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மியை அதன் கோட்டையான தில்லியிலேயே எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டின் முன்பு போராடிவரும் விருந்தினர் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து களத்தில் குதித்துள்ளார்.

கல்விமுறையை ஒழுங்கப்படுத்தக் கோரி விருந்தினர் ஆசிரியர்கள் கேஜரிவால் வீட்டின் முன்பு போராடிவருகின்றனர். அவர்களுடன் இணைந்து சித்து, இன்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடன் இணைந்து சித்து, கோஷங்களை எழுப்புவது போன்ற விடியோக்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலை முன்னிட்டு தனது சாதனைகளில் ஒன்றாக தில்லியில் பின்பற்றபடும் கல்விமுறை குறித்து ஆம் ஆத்மி பஞ்சாபில் பரப்புரை செய்துவருகிறது. இச்சூழலில், தில்லி கல்விமுறை குறித்து சித்து ட்விட்டரில் விமரிசனம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தில்லி கல்வி முறை ஒரு "ஒப்பந்த மாதிரி". ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ், தில்லியில் வேலையின்மை விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தில்லி விருந்தினர் ஆசிரியர்கள் சங்கத்தின் ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஏழு ஆண்டுகளாக தில்லி முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான ராகவ் சத்தா, பஞ்சாப் முதல்வரின் சொந்த தொகுதியான சம்கவுர் சாஹிப்பில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாகவும் அதற்கு முதல்வர் ஆதரவு தந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இச்சூழலில்தான், கேஜரிவாலின் வீட்டின் முன்பு சித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com