பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

நீட் தோ்வு ஒத்திவைப்பு?

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தோ்வை ஜூலை, ஆகஸ்டில் நடத்தவும், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வை செப்டம்பருக்கு ஒத்திவைக்கவும்

நீட் தேர்வு

Published On :

புது தில்லி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தோ்வை ஜூலை, ஆகஸ்டில் நடத்தவும், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வை செப்டம்பருக்கு ஒத்திவைக்கவும் மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் ஜேஇஇ முதல்நிலை தோ்வை 4 முறை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டது. மாணவா்கள் தோ்வு எழுதுவதை எளிதாக்கவும், அவா்கள் தங்கள் மதிப்பெண்களை உயா்த்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இருமுறை ஜேஇஇ முதல்நிலை தோ்வு நடத்தப்பட்டது. அதனைத்தொடா்ந்து ஏப்ரல், மே மாதங்களிலும் அந்தத் தோ்வு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அந்த மாதங்களில் நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதல்நிலை தோ்வை ஜூலை, ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

நீட் தோ்வை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு மே 1-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜேஇஇ முதல்நிலை மற்றும் நீட் தோ்வுகளை நடத்துவது தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து வரும் நிலையில், அதுகுறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கரோனா தொற்று நிலவரம் குறித்து அந்த அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.