தடுப்பூசி மீதான மக்களின் அச்சம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பில் தகவல்

இணைய வழியாக 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொள்ள 7 சதவிகிதத்தினர் மட்டும்தான் அச்சம் தெரிவித்துள்ளனர் என புதிய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளிலேயே குறைவான விகிதத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்த அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற இணையதளம் வழியாக 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், 67 சதவிகிதத்தினர் ஆண்களாகும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாததன் காரணத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துகணிப்பு நடத்தப்பட்டவர்களில், 42 சதவிகிதத்தினர் முதல் தர நகரை சேர்ந்தவர்கள். 27 சதவிகிதத்தினர் இரண்டாம் தர நகரையும் 31 சதவிகிதத்தினர் மூன்று, நான்கு மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவின் மக்கள் தொகையில் 94 கோடி பேர் வயது வந்தவர்கள். அதில், 68 கோடி பேருக்கு ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்து கொண்டுள்ளனர்.

கருத்துக்கணிப்பு குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனர் சச்சின் தபரியா கூறுகையில், "கருத்து கணிப்பு நடத்தப்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 46 சதவிகிதம் பேர் விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளனர்

தடுப்பூசி செலுத்தி கொள்ள திட்டமிடாத 27 சதவிகம் பேர் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உரிய பாதுகாப்பு அளிக்கிறதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com