புதுதில்லி: கரோனா, நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை (ஏப். 1) முதல் 10.7 வரை சதவீதம் உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வுக் குறித்து மாநிலங்களவை கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.
சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை திரும்பப் பெற வலியுறுத்தினார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.
இந்தியாவின் மருந்துப் பொருள்களின் விலைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் தேசிய மருந்துப் பொருள்கள் விலை ஆணையம் 800 மருந்துகளின் மொத்த விலையை 10.7 சதவீதம் உயா்த்த அனுமதி அளித்தது.
இதய அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் ‘ஸ்டென்ட்’, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் உலோகப் பொருள்களின் விலையும் உயருகிறது.
தற்போது விலை உயா்வுக்கு உள்ளான மருந்துகள் மொத்த மருந்துச் சந்தையில் 18 சதவீதமாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.1.5 டிரில்லியனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

