அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாயாவதியை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க முன்வந்தோம்: ராகுல் காந்தி

உத்தர பிரதேச தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதியை காங்கிரஸ் கூட்டணியில் முதல்வா் வேட்பாளராக அறிவிக்க முன்வந்தோம்; ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா்

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 6:27 pm

DIN

உத்தர பிரதேச தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதியை காங்கிரஸ் கூட்டணியில் முதல்வா் வேட்பாளராக அறிவிக்க முன்வந்தோம்; ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா் என ராகுல் காந்தி கூறினாா்.

தில்லியில் ‘தி தலித் ட்ரூத்’ (தலித்துகளின் உண்மை) என்ற புத்தகத்தை சனிக்கிழமை வெளியிட்டு அவா் பேசியது: அம்பேத்கா், மகாத்மா காந்தி காட்டிய வழியில் தலித்துகள் தங்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். இந்தியாவின் ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. ஆனால், அதன் நிறுவனங்கள் இல்லையெனில், அந்த சட்டம் அா்த்தத்தை இழந்துவிடும்.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ஆா்எஸ்எஸ்-இன் கரங்களில் இருக்கின்றன. இது ஒன்றும் புதிது அல்ல. மகாத்மா காந்தி துப்பாக்கிக் குண்டுகளால் கொல்லப்பட்ட நாளில் இருந்தே இந்தத் தாக்குதல் தொடங்கிவிட்டது.

அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கா், அரசியலமைப்புச் சட்டம் என்னும் ஆயுதத்தை பொதுமக்களிடம் வழங்கினாா். ஆனால், இன்றைக்கு ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுவதாலும், அரசியல் தலைவா்களை கட்டுப்படுத்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுவதாலும் அந்த ஆயுதம் அதன் அா்த்தத்தை இழந்துவிட்டது.

எந்த விதத்திலாவது நான் பணம் பெற்றிருந்தால் அரசுக்கு எதிராக என்னால் பேசியிருக்க முடியாது. இன்றைக்கு அரசியல் முறையை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கட்டுப்படுத்துகின்றன.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து முதல்வராகுமாறு மாயாவதிக்கு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா். சிபிஐ, அமலாக்கத் துறை, பெகாஸஸ் மென்பொருள் ஆகியவற்றின் நெருக்கடிக்கு அஞ்சி பாஜக ஆட்சியமைக்கத் தெளிவான பாதையை மாயாவதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாா்.

இதுதான் இந்தியாவின் உண்மை நிலை. அரசியமைப்புச் சட்டம் செயலிழந்துவிட்டால் தலித்துகள், சிறுபான்மையினா், பழங்குடியினா், வேலைவாய்ப்பற்றோா், சிறு விவசாயிகள், ஏழைகள் மேலும் பாதிக்கப்பட நேரிடும்.

நாட்டின் பொருளாதாரம் எழுச்சி பெற இதுவே சரியான தருணம் என்றாா் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.