/

'பிரில்லியன்ட்' என ஆனந்த் மஹிந்திரா எதைச் சொல்கிறார் பாருங்கள்

ஒரு டிரக்கின் பின்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை புகைப்படம் எடுத்து அதனை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

News image
'பிரில்லியன்ட்' என ஆனந்த் மஹிந்திரா எதைச் சொல்கிறார் பாருங்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:59 am

DIN


ஒரு டிரக்கின் பின்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை புகைப்படம் எடுத்து அதனை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா, சுட்டுரையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கருத்துகளையும் பதிவு செய்வார்.

பொதுவாக பல வாகனங்களின் பின் பக்கத்தில் பல வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.  பெயர் முதல் பொன்மொழிகள் வரை அதில் அடக்கம். இதையெல்லாம் அனைவருமே பார்க்க முடியும். வழக்கமான ஒன்றும்கூட. ஆனால், ஆனந்த் மஹிந்திரா தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம்.

ஒரு சரக்குப் பெட்டகம் ஏற்றப்பட்டிருக்கும் டிரக்கின் பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் உங்களது வாகனத்தின் காற்றுப் பையை இங்கே பரிசோதிக்கவும் என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை தனது சுட்டுரையில் பகிர்ந்ததோடு, புத்திசாலி என்று அதனுடன் பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக, தொழிலதிபர் ஆனந்த் மகிழ்ந்திரா, தனது சுட்டுரையில் பகிரும் தகவல்கள் பலவும் வைரலாவது உண்டு. அந்த வகையில், இந்தப் புகைப்படமும் பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.