வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க.. என்ன செய்கிறார்கள் பாருங்கள்
பிகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து,


பிகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, பாட்னா பல்கலைக்கழக வளாகம் தொடங்கி கட் நதிக்கரையோரம் வரை அமர்ந்து அரசுத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கியுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் ஒரேயிடத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் பேனா மற்றும் புத்தகத்துடன் அமர்ந்து அரசுத் தேர்வுகளுக்காக படிக்கும் அந்த புகைப்படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க.. அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்
ரயில்வே, மாநில அரசுப் பணி தேர்வாணையம் உள்ளிட்ட பல அரசுத் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். இங்கே வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் மாணவர்களுக்கு இலவசமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை வாரந்தோறும் சுமார் 12 ஆயிரம் முதல் 14 பேர் எழுதுகிறார்கள்.
பொறியியல் பட்டதாரி முதல் பல உயர்கல்வி படித்த இளைஞர்களும் தன்னார்வத்தோடு பங்கேற்று இங்கே இளைஞர்களுக்கு கல்வி புகட்டி வருகிறார்கள்.
சுமார் 30 முதல் 35 பேர் குழுவாகச் சேர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் விகிதம் 7.60 சதவீதமாகும். பிகார் மாநிலத்தின் வேலையில்லாத இளைஞர்களின் விகிதம் 14.4 சதவீதமாகும். நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது பிகாரில். 2021ஆம் ஆண்டு டிசம்பரில் இது 16 சதவீதமாக இருந்து, பிறகு 2022, ஜனவரியில் 13.3 சதவீதமாகக் குறைந்து, பிப்ரவரியில் 14 அக உயரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...