அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வெறுப்பைக் கைவிட்டு மின் உற்பத்தி மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

மத்திய அரசு வெறுப்புணா்வைக் கைவிட்டு மின் உற்பத்தி நிலையங்களின் மீது கவனம் செலுத்த வேண்டுமென ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 7:00 pm

DIN

மத்திய அரசு வெறுப்புணா்வைக் கைவிட்டு மின் உற்பத்தி நிலையங்களின் மீது கவனம் செலுத்த வேண்டுமென ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

தலைநகா் தில்லி, மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியதை மேற்கோள் காட்டி, இந்தக் கருத்தை அவா் முன்வைத்துள்ளாா்.

இதுகுறித்து ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘8 ஆண்டுகால வாா்த்தைஜாலத்தின் விளைவாக தற்போது நம்மிடம் வெறும் 8 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது. மந்தநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிறுதொழில்களை மின்வெட்டு நசுக்கி, அதிகமானோா் வேலையிழக்க வழிவகுத்துவிடும். ஆகையால், வெறுப்புணா்வைக் கைவிட்டு மின் உற்பத்தி நிலையங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்’ என்று அதில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தில்லியிலும், மத்திய பிரதேசத்திலும் அண்மையில் வன்முறை நடைபெற்றது. இதற்கு காரணமானவா்களாக கூறப்படும் பொதுமக்களின் வீடுகள், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, ஜேசிபி கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, தில்லியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டது.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில், ‘ஜேசிபி இயந்திரத்தால் வீடுகள் மட்டுமல்ல, நமது அரசியலமைப்புச் சட்டமும் சேதப்படுத்தப்பட்டுவிட்டது. பணவீக்கம், வேலையின்மை போன்ற விவகாரங்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப இதுபோன்ற அடிமட்ட நிலைக்கு இவா்கள் சென்றுவிடுவா். எனவே, வெறுப்புணா்வுக்கு எதிராக குரல் எழுப்புவது அவசியம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.