அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மே 6ல் தெலங்கானா செல்கிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மே 6 ஆம் தேதி தெலங்கானாவிற்கு வருகை தருகிறார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:45 am

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மே 6 ஆம் தேதி தெலங்கானாவிற்கு வருகை தருகிறார். 

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அடுத்து வரவுள்ள தேர்தல்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது. 

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திற்கு 2023 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வியூகங்களை காங்கிரஸ் கட்சி வகுத்து வருகிறது. 

இதையடுத்து தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ ஜக்கா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மே 6 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானா வருகிறார். மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசவும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசின் தோல்வியை எடுத்துரைக்கவிருக்கிறார். 

மே 6 ஆம் தேதி தெலங்கானாவில் நடைபெற உள்ள கூட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தெலங்கானாவில் மக்கள் அவதிப்படுகின்றனர். காவல்துறை அதிகாரிகளால் சாமானிய மக்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. காங்கிரஸ் இங்குள்ள மக்களுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.