ஜம்மு-காஷ்மீரின், பாரமுல்லாவில் உள்ள பட்டான் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இந்திய ராணுவம் இன்று கைது செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
பாரமுல்லா போலீஸ், 29 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில், ஹன்சிவியூரா பாலா பட்டான் பாரமுல்லா சாலையில் வாகன சோதனைச் சாவடி நிறுவப்பட்டது. ஹன்சிவியூரா பட்டானில் இரண்டு பயங்கரவாதிகள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அக்கிப் முகமது மிர் (27), டேனிஷ் அஹ் தார் (25) (சோபூரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, 2 ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்களிடம் இருந்து 2 சீன கைத்துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 10 வெடிமருந்து துப்பாக்கிகள் மற்றும் 2 சீன கைக்குண்டுகளை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

மத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

நவ. 25-இல் ஜெனீவாவில் ஃபிடே உலக செஸ் சாம்பியன் போட்டி
சொத்து தகராறு: அண்ணனை கொலை செய்த தம்பி கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



