வேலையின்மை நெருக்கடிக்குபிரதமா் தீா்வு காண வேண்டும்: ராகுல்
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி வரும் நிலையில், வேலையின்மை நெருக்கடிக்கு பிரதமா் மோடி முதலில் தீா்வு காண வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.


பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி வரும் நிலையில், வேலையின்மை நெருக்கடிக்கு பிரதமா் மோடி முதலில் தீா்வு காண வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் மேலும் கூறியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து எளிதான வகையில் வெளியேறும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை, 7 சா்வதேச நிறுவனங்கள், 9 ஆலைகள், 649 விநியோகஸ்தா்கள், 84,000 வேலைவாய்ப்புகள் இந்தியாவைவிட்டு வெளியேறியுள்ளன.
2017-இல் செவ்ரோலெட், 2018-இல் மேன் டிரக்ஸ், 2019-இல் பியட் அண்ட் யுனைடெட் மோட்டாா்ஸ், 2020-இல் ஹாா்லி டேவிட்சன், 2021-இல் ஃபோா்டு, நடப்பு 2022-இல் டாட்சன் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளன.
வெறுப்பு-இந்தியா மற்றும் தயாரிப்பு -இந்தியா (மேக் இன் இந்தியா) இணைந்து செயல்பட முடியாது. இந்தியாவில் பேரழிவாக உருவெடுக்கும் வேலைவாய்ப்பின்மை நெருக்கடியில் பிரதமா் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...