ஆயுதங்கள் வழங்கிய குற்றத்திற்காக 24 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தென்கிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
துருவ் அலியாஸ் என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அவர் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 2) அன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்த ஆயுதங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்கையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் பேரில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்தனர்.
இது குறித்து துணைக் காவல் ஆணையர் ஜஸ்மீத் சிங் கூறியதாவது: “ 12 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் கடந்த 3 ஆண்டுகளாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆயுதங்களை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதன் பின், தனக்கென ஒரு அமைப்பை தில்லியில் உருவாக்கி அதன் மூலம் ஆயுதங்களை கைமாற்றி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் 400க்கும் அதிகமான ஆயதங்களை தலைநகர் தில்லியில் கைமாற்றியுள்ளார். துருவ் இதற்கு முன்னதாக சில வழக்குகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு துருவ் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து சமையல் எண்ணெய் ஏற்றி வந்த வாகனத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி அதிலிருந்து கொள்ளையடித்தனர்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் விளையாடாதது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்!

அமெரிக்க பெண் தோழியை கொன்ற வழக்கில் இந்திய மாணவர் கைது!

லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்டவரின் மனைவிக்கு அதே பொறுப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!


