திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நொய்டாவில் பாஜக தலைவரின் வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் இடிப்பு

நொய்டாவில் தலைமறைவாக இருக்கும் அரசியல்வாதி ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அரசுத் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத்தள்ளினர்.

News image

நொய்டாவில் பாஜக தலைவரின் வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் இடிப்பு

Updated On :8 ஆகஸ்ட் 2022, 12:47 pm


புது தில்லி: நொய்டாவில் தலைமறைவாக இருக்கும் அரசியல்வாதி ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டில் முகப்பில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அரசுத் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத்தள்ளினர்.

கிராண்ட் ஒமாக்ஸி குடியிருப்புக் கட்டடத்தில், மற்றொரு குடியிருப்பில் வகிக்கும் பெண்ணை தாக்கி, இழிவாகப்பேசியதாக, தன்னை பாஜக அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீகாந்த் தியாகி மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.

குடியிருப்பின் பொதுவிடத்தில் மரங்கள் நடுவதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்து, இழிவாகப் பேசியிருக்கிறார் தியாகி. இந்த சம்பவத்தில் அவருடன் நெருங்கிய கூட்டாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் பாஜக ஒதுங்கியிருந்தாலும், கிசான் மோர்ச்சா அமைப்பின் செயல் உறுப்பினர் என்று தியாகி கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.