2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜாரத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு, இழப்பீடு கோரிய மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களும் இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதால் அவற்றை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
குஜராத் கலவரத்தின்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை உள்பட அவரது குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சமீபத்தில் 11 குற்றவாளிகளும் அந்த மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளையும் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

