காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தேவதாஸ் பாமகவில் இணைந்தார்!
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்.


காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும், தொழிலதிபருமான சேலம் ராமசாமி உடையாரின் மகனும், சேலம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான தேவதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த தேவதாஸ் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான கடிதத்தை ராமதாஸ் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத்தின் செயலாளருமான கார்த்தி உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...