செல்ஃபி எடுத்தபோது தவறி கிணற்றில் விழுந்த மணமக்கள்; திருமணம் ஒத்திவைப்பு

திருமணத்துக்கு முந்தைய நாள் நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின்போது, மணமகள் செல்ஃபி எடுக்க முயன்றபோது கால் தவறி மணமக்கள் குவாரியில் இருந்த கிணற்றில் விழுந்து காயமடைந்தனர்.
செல்ஃபி எடுத்தபோது தவறி கிணற்றில் விழுந்த மணமக்கள்; திருமணம் ஒத்திவைப்பு
செல்ஃபி எடுத்தபோது தவறி கிணற்றில் விழுந்த மணமக்கள்; திருமணம் ஒத்திவைப்பு


கொல்லம்: திருமணத்துக்கு முந்தைய நாள் நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின்போது, மணமகள் செல்ஃபி எடுக்க முயன்றபோது கால் தவறி மணமக்கள் குவாரியில் இருந்த கிணற்றில் விழுந்து காயமடைந்தனர்.

கிணற்றுக்குள் விழுந்த மணமக்களை உள்ளூர் மக்களுடன் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து போராடி மீட்டனர்.

காட்டுபுரம் பகுதியில் உள்ள அயிரவள்ளி குவாரியில், வியாழக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது.

இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்ததால், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது, மணமகன் விணு கிருஷ்ணன், மணமகள் சாந்திராவை அழைத்துச் சென்று குவாரியில் உள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளார். 


அப்போது அங்கே அவர்கள் செல்ஃபி எடுத்த போது மணமகள் தவறி 150 அடி உயர பாறையிலிருந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளார். உடனே மணமகன் விணுவும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆழமான பகுதியில் விழுந்த மணமகளை இழுத்துக் கொண்டு மேடானப் பகுதிக்கு வந்தாலும் அவரால் மணமகளைக் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக விரைந்து வந்த உள்ளூர் மக்கள், போராடி மணமகளை மீட்டனர்.

இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாந்திராவுக்கு முதுகெலும்பிலும், காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், 3 மாதங்கள் முழு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com