எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒருநாள் அது நடக்கும்.. எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள்: ராகுல் காந்தி

பாஜகவை, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும், எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image
ராகுல் காந்தி பேச்சு
Updated On :16 டிசம்பர் 2022, 12:43 pm

DIN


இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100வது நாளை எட்டியிருக்கும் நிலையில், பாஜகவை, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும், எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 100வது நாள் என்பதால், வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி செயலிழந்துவிட்டது என்று கூறுவது தவறானது. எனது வார்த்தையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பாஜகவை, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும், ஏனென்றால், கட்சி, போட்டியிலிருந்து அகலவில்லை என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது குறித்த கேள்விக்கு, கட்சியிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு எங்களது வரவேற்புகள், ஏனென்றால் அவர்களால் பாஜகவுக்கு எதிராக போராட முடியாது. மிக்க மகிழ்ச்சி என்று பதிலளித்துள்ளார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி எந்த தவறும் செய்யவேயில்லை என்று நான் கூறப்போவதில்லை. நான் உள்பட பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து தொலைவாக இருந்துவிட்டனர். இது வெளிப்படையான தொலைவு இல்லை என்றாலும் வலி தரக்கூடியது. தற்போது நடந்து வரும் நடைப்பயணத்தின் மூலம், மக்களின் அந்த வலியை உணர முடிகிறது என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.