மத்திய அரசு அதானி, அம்பானிகளுக்கான அரசாக இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் நடைபயணம் பல்வேறு மாநிலங்களின் வழியாகப் பயணித்து தற்போது நாட்டின் தலைநகரான தில்லியை அடைந்துள்ளது.
100 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த நடைபயணத்தில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு காங்கிரஸின் இந்த நடைபயணத்திற்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ராகுல் காந்தியுடன் இணைந்த கமல்ஹாசன்
இந்நிலையில் தில்லியில் நடைபயணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நாட்டின் நடப்பது அம்பானி, அதானி ஆட்சி என கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இது நரேந்திர மோடியின் அரசு கிடையாது. இது அதானி, அம்பானிகளின் அரசு. உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப இந்துக்கள், இஸ்லாமியர்கள் என பிரிவினை விதைக்கப்படுகிறது. பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் பக்கோடா விற்றுக் கொண்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | தில்லியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: காரணம் இதுதான்!
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஒற்றுமை நடைபயணத்தில் வன்முறை இல்லை. நான் அரசியலுக்கு 2004ல் வந்த போது எங்கள் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது ஊடகங்கள் என்னை வாழ்த்தின. அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நிலப்பிரச்னையை எழுப்பியபோது அவைகள் எனக்கு எதிராகத் திரும்பின” என அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு

ரூ.1,60,000 சம்பளத்தில் வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

அரசன் படப்பிடிப்பு துவங்குமா?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


