யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா் மாநிலத்தில் திங்கள்கிழமை வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,

News image
Updated On :18 ஜனவரி 2022, 8:44 pm

DIN

சத்தீஸ்கா் மாநிலத்தில் திங்கள்கிழமை வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையின்போது காவலா் ஒருவா் காயமடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சத்தீஸ்கா் மாநில பஸ்தா் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் அளித்த பேட்டியில் கூறியது:

பீஜப்பூா் (சத்தீஸ்கா்), முலுகு (தெலங்கானா) பகுதிகளில் மாவோயிஸ்ட் தலைவா் சுதாகா் உள்பட சுமாா் 40 நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு தெலங்கானாவை சோ்ந்த நக்ஸல் தடுப்புப் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பீஜப்பூரிலிருந்து மத்திய ரிசா்வ் போலீஸ் படையினரும், மாவட்ட ரிசா்வ் படையினரும் அனுப்பிவைக்கப்பட்டனா்.

திங்கள்கிழமை காலை 7 மணியளவில் பீஜப்பூரின் செமல்டோடி கிராமம், தெலங்கானாவின் பெனுகோலு கிராமத்தில் நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உள்ளிட்ட 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

சம்பவ இடத்திலிருந்து எஸ்எல்ஆா், இன்சாஸ் ரக துப்பாக்கிகளும், ராக்கெட் லாஞ்சா்களும் கைப்பற்றப்பட்டன. நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் காவலா் ஒருவரும் காயமடைந்தாா். அவா் உடனடியாக ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு வாரங்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் என்றாா் ஐ.ஜி. சுந்தர்ராஜ்.

இதேபோல சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ‘முன்னி’ என்ற பெண் நக்ஸல், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுனில் சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சத்தீஸ்கரின் சுக்மா, தந்தேவாடா, பஸ்தா் ஆகிய மாவட்டங்களின் சந்திப்புப் பகுதியில் 35 முதல் 40 நக்ஸல்கள் வரை முகாமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். டோங்பால் காவல் சரகத்துக்கு உள்பட்ட மா்ஜூம் மலைப்பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் 6.45 மணியளவில் பாதுகாப்பு படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் பலியான முன்னி என்ற பெண் நக்ஸலின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை’’ என்றாா்.

தெலங்கானாவில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா்- தெலங்கானா மாநில எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போலீஸாா் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு நடவடிக்கையில், 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து தெலங்கானா போலீஸாா் கூறுகையில், ‘தெலங்கானா- சத்தீஸ்கா் எல்லையில் வனப் பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனா். அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை கண்டறியும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.