
தமிழகத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கல்வித் துறையில் தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், மருத்துவத்துறையில் மருத்துவர் வீராசாமி, கலைத்துறையில் ஏ.கே.சி.நடராஜன், ஆர்.முத்துகண்ணம்மாள், பல்லேஷ் பஜாந்த்ரி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புதுச்சேரியில் தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.