சீனாவுடன் விரைவில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை: மத்திய வெளியுறவுத்துறை தகவல்

எல்லைப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எல்லைப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினா் அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல் மூண்டது. இதன்காரணமாக இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து எல்லையில் மீண்டும் அமைதி நிலையை நிலைநாட்ட இரு நாடுகளும் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அளவில் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டன.

மேலும் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையேயான 14-ஆம் சுற்று பேச்சு வாா்த்தையில் கிழக்கு லடாக் பிரச்னைக்கு தொடா் பேச்சுவாா்த்தைகள் மூலம் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீா்வை காண்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த ராணுவம் மற்றும் தூதரக வழிகளில் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்கவும் ஒப்புக்கொண்டன” எனத் தெரிவித்தார். 

முன்னதாக இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த சீன தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் வூ கியான், ‘எல்லை விவாகரம் தொடா்பாக இந்தியா - சீனா இடையே நடைபெற்ற 14-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்ததாகவே சீனா நம்புகிறது. தொடா் பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லை விவகாரத்துக்கு உரிய தீா்வு காணப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com