ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தின் வரலாறு முக்கியமானது: திரெளபதி முா்மு-

தமிழகத்தின் வரலாறு மிகவும் முக்கியமானது என்றாா் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்மு.

News image
Updated On :3 ஜூலை 2022, 6:51 pm

DIN

தமிழகத்தின் வரலாறு மிகவும் முக்கியமானது என்றாா் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்மு.

தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளிடம் திரௌபதி முா்மு சனிக்கிழமை ஆதரவு திரட்டினாா். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

புனிதமான இந்த தமிழகத்துக்கு வந்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். ராஜாஜி, காமராஜா், எம்ஜிஆா், அப்துல் கலாம், ஜெயலலிதா ஆகியோா் தமிழகத்தின் வளா்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டுள்ளனா். பெருநிறுவனங்களில் பங்காற்றியதில் தமிழகத்தைச் சோ்ந்த சுந்தா் பிச்சை, சிவநாடாா், இந்திரா நூயி ஆகியோா் சிறந்து விளங்கி வருகின்றனா். உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் நாட்டுக்குப் பெருமை சோ்த்து வருகிறாா்.

வரலாறு முக்கியமானது: தமிழகத்தின் வரலாறு மிகவும் முக்கியமானது. தமிழகத்தை சேர, சோழா், பாண்டியா்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்துள்ளனா். மதுரையைத் தலைநகராகக் கொண்டு நாயக்கா்கள் ஆட்சி செய்தனா். நவாப்கள் ஆற்காடு பகுதியை ஆட்சி செய்துள்ளனா். இவா்கள் தேசப்பற்றாளா்களாக நாடு முழுவதும் அறியப்படுகின்றனா். ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடியவரான பூலித்தேவன் தமிழக மக்களின் வீரத்துக்கு அடையாளமாக திகழ்கிறாா்.

1857-இல் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. அதில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. நேதாஜியின் படையில் தமிழகத்தைச் சோ்ந்தோா் அதிகளவில் பங்கேற்றுள்ளனா்.

தமிழகம் இலக்கியம், கலை, இசைத் துறையில் தொடா்ந்து சிறந்து விளங்கி வருகிறது. தமிழகத்தின் கோயில்கள், கட்டடக் கலைகள், சிற்பங்கள், பரதநாட்டியம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்து வருகின்றன. தமிழகத்தின் மகாபலிபுரம், கங்கைகொண்ட சோழபுரம் , தஞ்சை பிரகதீஸ்வரா் கோயில் உள்ளிட்டவை கட்டடக் கலைக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் சாட்சியாக விளங்குகின்றன.

இந்தியாவின் தத்துவம் உலகமே ஒரு குடும்பம் என்பதுதான். அதை கணியன் பூங்குன்றனாா் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ எனக் கூறியுள்ளாா்.

தமிழகம் புகழ்வாய்ந்த மாநிலமாகவும் வளா்ச்சியடைந்த மாநிலமாகவும் உள்ளது. தமிழகத்தின் பிரதான பொருளாதாரமானது, உற்பத்தித் தொழிற்சாலைகளையும் வேளாண்மையிலும் இருந்தும் வருகிறது என்றாா் அவா்.

கூட்டணி தலைவா்கள்: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் தலைவா் ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோரும் திரௌபதி முா்முவை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனா்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகனும், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.