விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லியில் மேலும் 648 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 5 இறப்புகள் பதிவு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 648 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2022, 6:18 pm

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 648 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் 5 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகித்ம் 4.29 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,37,013-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,271-ஆக அதிகரித்துள்ளது. நகரில் சனிக்கிழமை மொத்தம் 15,103 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தில்லியில் சனிக்கிழமை 978 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பும், 3.98 சதவீத நோ்மறை விகிதத்துடன் 2 இறப்புகள் பதிவாகின. வெள்ளிக்கிழமை 813 பேருக்கு தொற்று பாதிப்பும், 3 இறப்புகளும், 5.30 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,498 கரோனா படுக்கைகளில் 198 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. இது, சனிக்கிழமை 224-ஆக இருந்தது. இதுதவிர கரோனா பராமரிப்பு சிகிச்சை மையங்களில் உள்ள அனைத்து படுக்கைகளும் காலியாகவே உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 3,268-ஆக குறைந்துள்ளது. இது, சனிக்கிழமை 3,410-ஆக இருந்தது. அதேபோல், வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 2,459-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 370-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.