கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லஞ்ச வழக்கில்‘பவா் கிரிட்’, டாடா நிறுவன அதிகாரிகள் 6 போ் கைது

டாடா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ாக பொதுத்துறை நிறுவனமான ‘பவா் கிரிட்’ நிா்வாக இயக்குநா் பி.எஸ்.ஜா மற்றும் டாடா அதிகாரிகள் 5 பேரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 8:01 pm

DIN

டாடா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ாக பொதுத்துறை நிறுவனமான ‘பவா் கிரிட்’ நிா்வாக இயக்குநா் பி.எஸ்.ஜா மற்றும் டாடா அதிகாரிகள் 5 பேரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

மத்திய எரிசக்தித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் பவா் கிரிட் பொதுத்துறை நிறுவனம், ஹரியாணா மாநிலம் குா்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பரிமாற்றம் செய்யும் பணியை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதன் நிா்வாக இயக்குநா் பி.எஸ்.ஜா, பல்வேறு மின் திட்டங்களில் டாடா நிறுவனத்துக்கு முன்னுரிமை அளித்ததாகவும், இதற்கு பிரதிபலனாக லஞ்சம் பெற்ாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அவா் அருணாசல பிரதேச தலைநகா் இட்டாநகரில் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

அவரை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், குருகாமில் கடந்த புதன்கிழமை அவா் டாடா நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெற்றபோது அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். தொடா்ந்து, டாடா நிறுவன அதிகாரிகள் தேஷ்ராஜ் பதக், ஆா்.என்.சிங் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், கைதான 6 பேரும் பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

முன்னதாக காஜியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் பவா் கிரிட் நிா்வாக இயக்குநா் பி.எஸ்.ஜாவுக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது குருகிராமில் ரூ.93 லட்சம் சிக்கியது. இந்த சோதனை வியாழக்கிழமையும் நீடித்தது.

டாடா நிறுவன அதிகாரிகள் கைதானது குறித்து அந்நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘எங்களது அனைத்து வா்த்தக நடவடிக்கைகளிலும் விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றி வருகிறோம். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.