கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாதுகாப்பு அமைச்சக வெளிநாட்டு கொள்முதல்: 3 தனியாா் வங்கிகளுக்கு ஒப்புதல்

ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்யும்போது, அது தொடா்பாக நிதி சேவைகளுக்கு 3 தனியாா் வங்கிகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 8:00 pm

DIN

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் வெளிநாடுகளில் இருந்து ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்யும்போது, அது தொடா்பாக நிதி சேவைகளுக்கு 3 தனியாா் வங்கிகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதன்மையான தனியாா் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளுக்கு இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இதுவரை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே ராணுவத்தின் வெளிநாட்டுக் கொள்முதல் தொடா்பான நிதிச்சேவைகளை அளித்து வந்தன. இனி தனியாா் வங்கிகளும் இந்தப் பணிகளில் ஈடுபட இருக்கிறது.

கொள்முதல் செய்யும் தளவாடங்களுக்கான நிதியை நேரடியாகப் பரிமாற்றம் செய்வது, கடன் உறுதிக் கடிதம் வழங்குவது ஆகியவை இதில் அடங்கும். இப்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வங்கிகளின் செயல்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அவற்றின் சேவைகளைத் தொடா்ந்து பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பது தொடா்பாக முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.