காவல் துணை ஆய்வாளர் சந்தியா தப்னா
காவல் துணை ஆய்வாளர் சந்தியா தப்னா

பெண் காவல் துணை ஆய்வாளர் வாகனம் ஏற்றி படுகொலை

ஜார்கண்டில் சோதனையின்போது  பெண் காவல் துணை ஆய்வாளர் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
Published on

ஜார்கண்டில் சோதனையின்போது  பெண் காவல் துணை ஆய்வாளர் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் துபுதனா பகுதியில் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) பெண் காவல் துணை ஆய்வாளர் சந்தியா தப்னா வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, எதிரே வந்த சிறியரக வேனை மடக்க முயற்சித்தபோது ஓட்டுநர் சோதனைக்கு பயந்து துணை ஆய்வாளர் மீது வண்டியை ஏற்றித் தப்பித்தார்.

இதில் படுகாயமடைந்த சந்தியாவை அருகே இருந்த மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வாகனத்தைப் பின் தொடர்ந்த காவலர்கள் ஓட்டுநரை கைது செய்ததுடன் வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை இரவு ஹரியாணாவில் சட்டவிரோத சுரங்கத்தை தடுக்கச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் மீது லாரி ஏற்றிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com