சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முதல் முறையாக, ஒரே நாளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
கரோனா பேரிடர் காரணமாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தியிருந்தது சிபிஎஸ்இ நிர்வாகம். இந்த நிலையில், இன்று காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளையும் பிற்பகல் 2 மணியளவில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் வெளியிட்டது.
மொத்தம் 100 மதிப்பெண் கொண்ட ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற மாணவர்கள் 33% மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 94.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் 95.21% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


