ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாட்டில் 2012 முதல் 1,000க்கும் மேற்பட்ட புலிகள் மரணம்

நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் மரணமடைந்திருக்கின்றன.

News image

நாட்டில் 2012 முதல் 1,000க்கும் மேற்பட்ட புலிகள் மரணம்

Updated On :27 ஜூலை 2022, 11:11 am

DIN


புது தில்லி: நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் மரணமடைந்திருக்கின்றன. புலிகளின் மாநிலம் என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில் தான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 75 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டு இது 127 ஆக உள்ளது. கடந்த ஆண்டுதான், 2012- 2022 ஆம் ஆண்டுகளில் புலிகளின் மரணம் அதிகளவில் பதிவான ஆண்டாக உள்ளது.

2020ஆம் ஆண்டில் 106 புலிகள் மரணமடைந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் புலிகளின் இறப்பு என்பது மெல்ல அதிகரித்தே வந்துள்ளது.

6 புலிகள் சரணாலயங்களைக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசத்தில், இந்தக் காலக்கட்டத்தில் 270 புலிகள் இறந்துள்ளன. இதற்கடுத்த இடத்தில் மகாராஷ்டிரமும் (183), கர்நாடகமும் (150) உள்ளன.  தமிழகத்தில் இதே காலக்கட்டத்தில் 66 புலிகள் இறந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.