தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'குற்றவாளி என்றைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான்': நட்டா

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு, குற்றவாளி ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொண்டதில்லை என ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூன் 2022, 4:54 pm

DIN


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு, குற்றவாளி ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொண்டதில்லை என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் விமர்சித்தது.

இதுபற்றி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கூறியதாவது:

"தான் குற்றவாளி என்றோ, நேர்மையானவன் அல்ல என்றோ எவரேனும் ஒப்புக்கொண்டதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஊழல் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கிறது. உங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் நீங்கள் நீதிமன்றம் சென்று அதை எதிர்கொள்ள வேண்டும். நேர்மையற்றவர்தான் ஜாமீன் கோருவார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.