காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு வந்த தகவலையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவே இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச்
சேர்ந்த பயங்கரவாதி நிசார் காண்டே என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி என்று கூறப்படுகிறது.
மேலும் அவரிடமிருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

ஆக்கிரமிப்பு காஷ்மீா் போராட்டக்காரா்கள் இந்தியாவுக்கு இணையான எதிரிகள்

ரஷியாவின் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் டெலிகிராம் நிறுவனா் சோ்ப்பு





