நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு புதிய சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், கரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால், விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையிடம் அவகாசம் கோரினார் சோனியா காந்தி.

இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜூன் 13-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com