சோனியா காந்தி தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை விடுத்ததன் பேரில், வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அனுப்பியது.
இந்நிலையில், சோனியா காந்தி கரோனா தொற்று பிரச்னைகள் காரணமாக தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...