ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராகுல் காந்தி மீண்டும் நாளை (ஜூன்14) ஆஜராக சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் நாளை (ஜூன் 14) ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
ராகுல் காந்தி
Updated On :13 ஜூன் 2022, 4:49 pm

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் நாளை (ஜூன் 14) ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நடைபெற்று வந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவுபெற்றது.  காலை 11.10 மணி முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் 80 நிமிடங்களுக்கு  உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.

நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காலை ராகுல் காந்தி ஆஜரான நிலையில், மதியம் வரை 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தியிடம் அலமாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
 
இதையடுத்து இன்று காலை அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து அவர் வெளியே வந்தார். பிற்பகலுடன் விசாரணை நிறைவு பெற்றதாக அப்போது கருதப்பட்டது. எனினும் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். 

உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்ற அமலாக்கத் துறையினரின் விசாரணை இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

விசாரணையைத் தொடர்ந்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக, அமலாக்கத் துறையினரின் விசாரணையில் பிற்பகல் உணவு இடைவேளையின்போது, மருத்துவமனையில் உள்ள சோனியா காந்தியைப் பார்ப்பதற்காக  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் மருத்துவமனை சென்றனர்.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் நாளை (ஜூன் 14) ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.